கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமாக 110 கோடி ரூபாய் நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமான 97 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 145 கோடியே 48 லட்சத்து 30 ஆயிரத்து 986 ரூபாய் பெறப்பட்டுள்ளது. பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய அனைத்து நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Next Story