"கிருமி நாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும்" - சென்னை மாநகராட்சி உத்தரவு
ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு சில கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு சில கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது. தினமும் 2 முறை அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் எனவும், சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் அதேபோல் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி, ஏ.டி.எம்-ல் ஒரு நபர் பயன்படுத்திய பிறகு, உடனே கிருமி நாசினி தெளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story