திருச்செந்தூர் கோயிலில் உணவின்றி தவிக்கும் சாமியார்கள் - மருத்துவ பரிசோதனை செய்து தங்குவதற்கு மண்டபம் ஒதுக்கீடு
திருச்செந்தூர் கோயில் வாசலில் உணவின்றி தவித்து வந்த சாமியார்கள், ஆதரவற்றோர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தங்குவதற்கு மண்டபமும் ஒதுக்கப்பட்டது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலின் வாசலில் ஏராளமான சாமியார்கள், ஆதரவற்றோர் உள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரும் உணவை இவர்கள் சாப்பிட்டு வந்த நிலையில் ஊரடங்கால் இவர்கள் அனைவரும் உணவின்றி தவித்து வந்தனர்.இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் உத்தரவின் பேரில், வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா தலைமையில் 150க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கோயிலுக்கு சொந்தமான இடும்பன் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டதோடு, அவர்களுக்கு போதுமான உணவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Next Story