ஊரடங்கு அறிவிப்பு - தலைகீழாக மாறிய இயல்பு வாழ்க்கை

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், மத்திய அரசும்- மாநில அரசும் பல நிவாரண நடவடிக்கைகளை எடுத்தன.
ஊரடங்கு அறிவிப்பு - தலைகீழாக மாறிய இயல்பு வாழ்க்கை
x
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறத் தொடங்கியது. 

* அந்த நிலையில் மார்ச் 26 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டார்.

* ஒட்டுமொத்தமாக சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான  நிதி ஒதுக்கீட்டை  அறிவித்தார்.

* மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு காப்பீடு,  ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு 500 வீதம் உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டது.
 
* அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் 2 ஆயிரம் வீதம்  விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் மார்ச் 27  ஆம் தேதி ரிசர்வ் வங்கி சார்பில் பல்வேறு  நிதித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 

* வங்கி கடன்களின் தவணைகளை செலுத்த 3 மாதங்களுக்கு அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. 

* வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 5 புள்ளி 15 சதவீதத்தில் இருந்து 4 புள்ளி 4 சதவீதமாக குறைத்தது.  

* சி.ஆர்.ஆர் விகிதத்தை  3 சதவீதமாக குறைத்து, சுமார் ஒரு லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கித் துறைக்கு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

* மார்ச் 27 ஆம் தேதி அன்று, பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதிய தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி,  கொரோனா நிவாரண பணிகளுக்காக தமிழகத்துக்கு 9 ஆயிரம்  கோடி  ரூபாய் நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தார்.

* மார்ச் 28  ஆம் தேதி அறிவிப்பின்படி,  கொரோனா நிவாரண பணிகளுக்காக பி.எம் கேர்ஸ் எனப்படும் பிரதமர் - குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால நிவாரண நிதியத்தை  தொடங்கப்பட்டது.

* அத்தியாவசிய பொருட்களுக்கான சிறப்பு பார்சல் சேவை ரயில்களை இயக்கப் போவதாக இந்திய ரயில்வே மார்ச் 29   அறித்தது. 

* பயணிகள் ரயில் பெட்டிகளை, கொரோனா தடுப்பு வார்டுகளாக மாற்றும் திட்டமும் அப்போது அறிவிக்கப்பட்டது.

* கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு 17 ஆயிரத்து 287 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஏப்ரல் 3 அன்று ஒதுக்கியது.

* ஏப்ரல் 9 அன்று, இரண்டாவது கட்டமாக பல்வேறு மாநிலங்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க மத்திய சுகாதாரம் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

* உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் ஏழை மக்கள் நெருக்கடிகளை சந்தித்த நிலையில், தன்னார்வலர்கள் மக்களைத் தேடி உணவு, மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு அதற்கு தடை விதித்தது.

* தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உதவிகள் செய்ய எந்த தடையும் இல்லை என  தீர்ப்பு அளிக்கப்பட்டது.

* இந்த உத்தரவுக்கு பின்னர் மேலும், உற்சாகமடைந்த தன்னார்வலர்கள் உணவு பொருட்கள், மளிகைப் பொருட்களை பாதுகாப்பான முறையில் விநியோகிக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்