தொழில் துறையினருடனும் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை - எந்தெந்த தொழில்களுக்கு தளர்வு அளிப்பது தொடர்பாக ஆலோசனை
தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தொழில் துறையினருடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் எந்தெந்த தொழில்களுக்கு தளர்வு அளிப்பது என்பது தொடர்பாக நிதி துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 21 நபர்கள் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. . முதற்கட்டமாக டிவிஎஸ் குழுமம், முருகப்பா குழுமம் , ராம்கோ சிமெண்ட்ஸ், தோல் ஏற்றுமதி குழுமம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோருடன் ஆலோசனையானது நடத்தப்பட்டது.
Next Story