சம்பள பாக்கி - ஓட்டல் உரிமையாளர் வீட்டின் முன்பு ஊழியர்கள் போராட்டம்
நாகர்கோவிலில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு கடந்த டிசம்பர் முதல் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நாகர்கோவிலில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு கடந்த டிசம்பர் முதல் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. உரிமையாளரிடம் பல முறை முறையிட்டும் சரியான பதில் அளிக்காததால் அவரது வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டபோது, சம்பளத்தை பெற்று தரக்கோரி போலீசாரிடம் பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் சம்பளத்தை பெற்றுத்தருவதாக கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
Next Story