ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் - வழிமறித்த மக்கள்
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட குரோம்பேட்டை அஸ்தினாபுரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட குரோம்பேட்டை அஸ்தினாபுரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். அப்போது மேடவாக்கத்தில் சீல் வைக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் புறப்பட்ட போது, அவரது காரை வழிமறித்த மக்கள், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை என புகார் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகளை அழைத்த ஆட்சியர், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Next Story