ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி
x
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணியாளர்களின் மேம்பாட்டிற்காக, ஸ்டெர்லைட் பணியாளர்களின் ஒருநாள் ஊதியமான 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு 200 பாதுகாப்பு உபகரணங்களும், 30 ஆயிரம் பொதுமக்களுக்கு முக கவசங்களும், லாரி ஓட்டுநர்களுக்கு கிருமிநாசினிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்