"கடலுக்கு செல்லாத நாட்களில் வழங்கப்படும் ரூ.5000 வழங்க வேண்டும்" - மீனவர்கள் கோரிக்கை

ஊரடங்கால் கடலுக்கு செல்லாத நாட்களை மீன்பிடி தடைக்காலமாக கணக்கில் கொண்டு, அந்த காலத்தில் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுக்கு செல்லாத நாட்களில் வழங்கப்படும் ரூ.5000 வழங்க வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை
x
ஊரடங்கால் கடலுக்கு செல்லாத நாட்களை மீன்பிடி தடைக்காலமாக கணக்கில் கொண்டு, அந்த காலத்தில் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தடை உத்தரவால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம், குளச்சல், முட்டம், சின்ன முட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போதைய ஊரடங்கை, மீன்பிடி தடைக்காலமாக கருதி, அந்த காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்