"முக கவசம், சானிடைசர், சமூக விலகல் கட்டாயம்" - தி.மு.க வழக்கில் உயர் நீதிமன்றம் நிபந்தனை விதிப்பு

கொரோனா ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு உதவ, அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.
முக கவசம், சானிடைசர், சமூக விலகல் கட்டாயம் - தி.மு.க வழக்கில் உயர் நீதிமன்றம் நிபந்தனை விதிப்பு
x
கொரோனா ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு உதவ, அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. பொருட்கள் விநியோகம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நிவாரண உதவி வழங்க மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்