மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் ஆலோசனை - தற்போது உள்ள நிலை குறித்து ஆலோசனை
தமிழகத்தில், தற்போது உள்ள நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரனோ வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தற்போது உள்ள நிலை குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர், ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். காணொலி மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
Next Story