முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வழங்கியோர் பட்டியல்
கொரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 134 கோடியே 63 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ள நிலையில், நிதி வழங்கிய நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்கியவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
* இதன்படி அரசுப் போக்குவரத்து கழகங்களின் பணியாளர்கள் சார்பாக, 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அடாஸ் சின்டெல் பிராய்ஸ் கூட்டமைப்பு மற்றும் ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்கள் தலா 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.
* சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் 3 கோடி ரூபாயும், ஐஓபி வங்கிப்பணியாளர்கள் மற்றும் டியூப் இன்வஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் சார்பாக தலா 2 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.
* அதிமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி, காமராஜர் துறைமுகம் சார்பிலும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*நடிகர் அஜித் குமார் , மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ், உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் தலா 50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தலா 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்.
* இதுவரை மொத்தம் 134 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
* இதனிடையே டாடா நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான, 40 ஆயிரத்து 32 பிசிஆர் கொரோனா சோதனைக் கருவிகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story