"ஏழைக்கு உதவுபவன் கையை அரசு தட்டி விடுகிறது" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு
உணவு மற்றும் நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க கூடாது என்ற அறிவிப்பின் மூலம் தமிழக அரசு ஏழைக்கு உதவுபவன் கையை தட்டிவிடுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
உணவு மற்றும் நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க கூடாது என்ற அறிவிப்பின் மூலம் தமிழக அரசு ஏழைக்கு உதவுபவன் கையை தட்டிவிடுவதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக டிவிட்டர் சமூக வலைதளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், அண்டை மாநிலங்கள் சில கொரோானாவுடன் போராட தனியார், இளைஞர், ஓய்வுபெற்ற மருத்துவர் என பலரின் உதவியை நாடி பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் வேலைதெரிந்த நமது ஆட்சியர்களை, வேலைசெய்ய விடுமாறு அமைச்சர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story