"வரும்14ம் தேதி முதல் காய்கறி,மளிகை கடை நேரடி விற்பனைக்கு தடை" - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும்14ம் தேதி முதல், காய்கறி சந்தைகள் மற்றும் மளிகை கடைகள் பொதுமக்களுக்கு நேரடி விற்பனை செய்ய தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
வரும்14ம் தேதி முதல் காய்கறி,மளிகை கடை நேரடி விற்பனைக்கு தடை - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு
x
ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே 14-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட நிலையில், காலை முதல் மதியம் வரை, காய்கறி, மளிகை, பேக்கரிகள், பழக் கடைகள் மட்டும் செயல்பட்டன. திருவண்ணாமலையில் பல இடங்களில் சமூக இடைவெளி கடைபிக்கப்பட்ட நிலையில், மற்ற இடங்கள் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ள நிலையில், வரும் 14 தேதி முதல் பொது மக்களுக்கான நேரடி விற்பனைக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தடை விதித்துள்ளார். ஆர்டரின் பெயரில் வீடுகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய அவர் அனுமதித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்