மாநில அரசுகள் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய தடை - மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்களை மாநில அரசு கொள்முதல் செய்ய மத்திய அரசு தடை விதித்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
மாநில அரசுகள் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய தடை - மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
x
கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்களை மாநில அரசு கொள்முதல் செய்ய மத்திய அரசு தடை விதித்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டு உள்ள அறிக்கையில் மத்திய அரசின் இந்த உத்தரவு அரசியல் அமைப்புச் சட்டத்தை புறந்தள்ளும் வகையில் உள்ளதாகவும், உத்தரவை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார். பெரும் நிறுவனங்கள், சமூக கடமை திட்டத்தின் கீழ் மாநில முதல்வர்களின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கக் கூடாது என்றும் பிரதமரின் நிதிக்கு மட்டுமே அளிக்க வேண்டுமென்று அறிவித்திருப்பது தவறான ஒன்று என்றும், ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்