அம்பேத்கர், சின்னமலை பிறந்தநாள் : "பொதுமக்கள் நினைவிடங்களுக்கு செல்ல வேண்டாம்" - ஊரடங்கு உத்தரவால் தமிழக அரசு அறிவுறுத்தல்
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் தீரன் சின்னமலை பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் போது சிலைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மட்டுமே மரியாதை செலுத்துவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் தீரன் சின்னமலை பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் போது சிலைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மட்டுமே மரியாதை செலுத்துவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல்14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளும், 17ஆம் தேதி தீரன் சின்னமலை பிறந்த நாளும் வருவதால், வழக்கம் போல அரசு சார்பில் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், நினைவிடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Next Story