கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் அடக்கம் - பாதுகாப்பு உடைகளுடன் அடக்கம் செய்த தூய்மை பணியாளர்கள்
வேலூரில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை அவரது உறவினர்கள் கடைசியாக பார்க்கக் கூட முடியாத நிலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
வேலூரில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை அவரது உறவினர்கள் கடைசியாக பார்க்கக் கூட முடியாத நிலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஐந்து பேர் மட்டுமே பாதுகாப்பு உடை கவசங்கள் அணிந்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர். அவர்களின் பாதுகாப்பு உடைகள் அனைத்தும் உடனடியாக தீயில் எரிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள், மருத்துவ பரிசோதனை செய்தனர். அடக்கம் செய்த பணியை மேற்கொண்டது பெருமை அளிப்பதாக அவர்கள் கூறினர்.
Next Story