"பாதி குடோனுக்கு - மீதி குடிமகனுக்கு" - 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் குடிமகன்கள்

என்ன தான் டாஸ்மாக் கடைகள் மூடினாலும், ஒருபக்கம் குடிமகன்கள் கனகச்சிதமாக திட்டமிட்டு மது வாங்கி குடித்து தான் வருகிறார்கள்... அதில் ஒரு ஸ்கெட்ச் தான் இது...
பாதி குடோனுக்கு - மீதி குடிமகனுக்கு - ஸ்கெட்ச் போட்டு தூக்கும் குடிமகன்கள்
x
காய்கறிகளும், மளிகை பொருட்களும் எந்த நேரத்தில் கிடைக்கும் என்று அரசு பல அறிக்கைகள் விட்டால் கூட குடிமக்கள் பலருக்கு,  குழப்பங்கள் நீடிக்கத்தான் செய்கின்றன...

ஆனால், குடிமகன்களோ, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அரசு அறிவித்திருந்தாலும், எந்த நேரத்தில் கள்ள மது விற்பனை செய்யப்படுகிறது... எந்த சமயத்தில் மதுக்கடையில் உள்ள மது பாட்டில்கள் குடோன்களுக்கு மாற்றப்படுகின்றன..  என அனைத்து தகவல்களையும் விரல்நுனியில் வைத்துள்ளனர். அதற்கு உதாரணம் தான் இந்த சம்பவம்...

மது கிடைக்காமல் விரக்தியில் துடிக்கும் குடிமகன்களோ போதைக்காக விபரீத முயற்சிகளை மேற்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் நடக்கத்தான் செய்தன... வேறு சிலரோ  மதுக்கடைகளை சூறையாடி செல்கின்றனர். அவர்களிடம் இருந்து மதுவை காப்பாற்றவே, மதுக்கடைகளில் இருந்து மதுப்பாட்டில்களை போலீசார் பாதுகாப்போடு குடோன்களுக்கு மாற்றப்படுகின்றன... சரக்கு சேல்ஸூம் படு ஜோராக நடந்து வருகிறது.. பாதி பாட்டில்கள் லாரிக்கு சென்றால், மீதி பாட்டில்கள் குடிமகன்களின் இடுப்புக்குள் மறைத்து கொண்டு செல்லப்படுகின்றன.. இவையெல்லாம் போலீசார் கண்காணிப்பிலே நடப்பதே அவலத்தின் உச்சம்...


Next Story

மேலும் செய்திகள்