வீட்டில் இருந்தே ஆன்லைனில் பாடம் படிக்கும் மாணவர்கள் - கேந்திரிய வித்யாலயா பள்ளி சிறப்பு ஏற்பாடு
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறு பாடம் படிக்கும் வகையில் ஆன்லைனில் மூலம் கற்பிக்கும் முறைக்கு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. ZOOM App மூலம் மாணவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திய ஆசிரியர்கள், அதன் மூலம் ஆன்லைனில் பாடம் நடத்துகின்றனர். மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே செல்போன், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் பாடங்களை கலந்துரையாடல் மூலம் படிக்கின்றனர்.
Next Story