தனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்
தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 144 தடை உத்தரவால் பேருந்து வசதி இல்லாமல் 25 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வந்து காய்கறி வாங்கி செல்லும் தனுஷ்கோடி மக்களுக்கு இனி அதிகாரிகள் அவர்களுடைய பகுதிக்கு நேரடியாக சென்று பொருட்களை வழங்குவார்கள் என்றார்
Next Story