24 மணி நேரம் செயல்படும் பெட்ரோல் நிலையம் : அரசு அதிகாரிகள் அலட்சியம் - பொதுமக்கள் புகார்
ஓமலூர் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் பெட்ரோல் நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஓமலூர் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் பெட்ரோல் நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவை அடுத்து தமிழக அரசு அறிவித்துள்ள கால அளவினை பின்பற்றாமல், ஓமலூர் கடையாம்பட்டியில் பாரத் பெட்ரோல் நிலையம் 24 மணி நேரம் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் இவ்விவகாரத்தில் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்
Next Story