விற்பனை இல்லாத நிலையிலும் விலை ஏற்றம் : ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.34,096

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ள நிலையிலும், ஆபரண தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
விற்பனை இல்லாத நிலையிலும் விலை ஏற்றம் : ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.34,096
x
அத்தியாவசிய பொருட்கள் தவிர இதர பொருட்களின் விற்பனை முடங்கியுள்ள நிலையிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. ஆபரண தங்கத்தின் தேவை குறைந்திருந்தாலும், சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் ஆபரண தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் 34 ஆயிரத்து 96 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் 4 ஆயிரத்து 262 ரூபாயாக உள்ளது. விற்பனை இல்லாத நிலையிலும், தங்கம் விலை 34 ஆயிரத்தை தொட்டுள்ளது. கொரோனா அச்சம் காரண்மாக தங்க முதலீட்டு சந்தையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களால்  தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாய் வரை சரிந்துள்ளதும் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக உள்ளது. வெள்ளி விலை தொடர்ந்து 10 வது  நாளாக எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிலோ 41 ஆயிரத்து 700 ரூபாய் என்கிற அளவிலேயே உள்ளது. கொரோனா அச்சம் முடிவதற்குள், தங்கம்  விலை அதிகபட்ச  ஏற்றத்தைப் பார்க்கும் என்பதே தங்க  நகை வர்த்தகர்களின் கருத்தாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்