பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றிய மக்கள்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைத்து பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
x
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக மின் விளக்குகளை அணைத்து தீபம், டார்ச், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து இரவு 9 மணிக்கு, நாடு முழுவதும் பல இடங்களில் தங்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்த பொதுமக்கள், அகல் விளக்கு, மெழுகுவர்த்தி உள்ளிட்டவை மூலம், ஒளி ஏற்றி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் ஒளி ஏற்றிவைத்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அடுக்குமாடி வீடுகள் முதல் குடிசை வீடுகள் வரை  அணைத்து இல்லங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு ஒளி ஏற்றப்பட்டது. 

டெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக இரவு 9 மணிக்கு, பிரதமர் மோடி தனது டெல்லி இல்லத்தில் விளக்கேற்றினார். 

ஒளி விளக்கேற்றிய முதலமைச்சர், அமைச்சர்கள்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,  துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரும் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றினர்.

குடும்பத்துடன் சேர்ந்து விளக்கேற்றினார் விஜயகாந்த்

இதே போன்று, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தமது இல்லத்தில் மனைவி பிரேமலதா மற்றும் மகனுடன் சேர்ந்து விளக்கேற்றினார்.




Next Story

மேலும் செய்திகள்