"கடும் கட்டுப்பாடுகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" - வானொலி உரையில் பிரதமர் மோடி சூளுரை
கொரோனா என்ற உயிர் கொல்லியை தனித்து இருந்தே விரட்டுவோம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனதில் குரல் என்ற பெயரில், வானொலியில் உரையாற்றிய அவர், கொரோனா என்ற வைரஸ் எதிர்த்து போராடும், மருத்துவர் மற்றும் செவியர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஏழை மக்களை பாதித்துள்ளதை தானும் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற, கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில், கொரோனா தடுப்பு பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிவித்தார். எனவே, மக்கள் தனித்திருக்காவிட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலையை, கொரோனா உருவாக்கி விடும் என்றும் எச்சரித்துள்ளார்.
Next Story