ஊரடங்கு உத்தரவை மதிக்காக தேங்காய் கடை - கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்
கொரனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் உத்தரவை மீறிய தேங்காய் கடைக்கு நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொரனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், உத்தரவை மீறிய தேங்காய் கடைக்கு நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நெல்லை பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கடைகளை இரண்டு பகுதிகளாக பிரித்து பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் மற்றும் பாரதி நகர் பழைய காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி காந்தி மார்க்கெட் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவர் தேங்காய் கடை திறந்து வியாபாரம் செய்து வந்தார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.
Next Story