தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிப்பு - முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
x
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் வட்டி மற்றும் அசல் தொகையை வசூலிப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்த வேண்டும். காய்கறி கடை, சந்தை ஆகிய இடங்கள் விசாலமாக அமைக்கப்பட வேண்டும். மருந்து கடைகள், மளிகை கடைகளில் 3 அடி தூரம் இடைவெளியில் விற்பனை செய்ய வேண்டும். உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர கட்டுப்பாடின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், சர்க்கரை நோயாளிகள், ஹெச்ஐவி நோயாளிகள் போன்றவர்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். அத்தியாவசிய பொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெற மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்படும். ஆன்லைன் மூலம் மளிகைப் பொருட்கள், மருந்து பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு தடை இல்லை. ஆனால் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு தடை தொடரும்.


Next Story

மேலும் செய்திகள்