வரும் 27,28 தேதிகளில் கோயம்பேடு சந்தை விடுமுறை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வருகிற 27, 28 ஆகிய இரு தினங்கள் விடுமுறை என காய்கறி வியாபாரிகள் நல சங்க தலைவர் முத்துகுமார் அறிவித்துள்ளார்.
அரசின் கோரிக்கையை ஏற்று வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு அரசின் உத்தரவை தொடர்ந்து, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வருகிற 27, 28 ஆகிய இரு தினங்கள் விடுமுறை என காய்கறி வியாபாரிகள் நல சங்க தலைவர் முத்துகுமார் அறிவித்துள்ளார். வருகிற 29ஆம் தேதி வழக்கம்போல் கோயம்பேடு சந்தை இயங்கும் என தெரிவித்துள்ளார். மக்கள் சேவை, விவசாயிகள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்க தலைவர் கூறினார்.
Next Story