"வெளியூர் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து வசதியில்லை" - அரசு மீது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் 144 தடை உத்தரவால் வெளியூர் செல்லும் பொது மக்களுக்கு போதுமான பேருந்து ஏற்பாடுகளை அரசு செய்து தரவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் 144 தடை உத்தரவால் வெளியூர் செல்லும் பொது மக்களுக்கு போதுமான பேருந்து ஏற்பாடுகளை அரசு செய்து தரவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பேருந்துகளை குறைத்து விட்டால் மக்கள் எப்படி தங்கள் ஊருக்கு செல்வார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், உடனடியாக பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். கட்டணம் இல்லாமல் இலவசமாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும் தமது பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Next Story