உடல்நலக் குறைவால் சென்னையில் இயக்குநர் விசு காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் விசு உடல்நல குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.
உடல்நலக் குறைவால் சென்னையில் இயக்குநர் விசு காலமானார்
x
கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்று  விசு, இன்று காலமானார். அவரது மறைவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் , தமாகா தலைவர், ஜி.கே.வாசன், சரத்குமார் ஆகியோர், விசுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே விசுவின் உடல் திங்கட்கிழமை மதியம்  பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்