"கொரோனாவுக்கு மருந்து : பரவும் தகவல் உண்மையா?"- சட்டப் பேரவையில் ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு மருந்து : பரவும் தகவல் உண்மையா?- சட்டப் பேரவையில் ஸ்டாலின் கேள்வி
x
கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மையா? என கேள்வி எழுப்பினார். கொரோனா மருந்து, பரிசோதனை ஆய்வகம் குறித்து தி.மு.க உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதியாக உரிய உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றார். கொடிய நோயான கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை என்றும், தமிழக மருத்துவர்கள் குழு அந்த ஆய்வில் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பல நடவடிக்கைகளின் விளைவாக, கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்