முட்டை விலை 3 ரூபாயாக குறைந்தது - ஆம்லெட்- ஆப்பாயில் விலை குறையுமா? என எதிர்பார்ப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உருவான வதந்தியால் கறிக்கோழி விலை சரிந்ததைப்போல தற்போது முட்டை விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உருவான வதந்தியால், கறிக்கோழி விலை சரிந்ததைப்போல தற்போது முட்டை விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் முட்டைக்கு கேரளா தடை விதித்துள்ளதால் முட்டை விலை 5 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக சரிந்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் முட்டை விலை மேலும் குறையலாம் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை, உணவகங்களில் ஆம்லெட் விலை 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காய விலையும், முட்டை விலையும் குறைந்துள்ள நிலையில், ஆம்லெட், ஆப்பாயில் விலைகளை உணவகங்கள் குறைக்க வேண்டும் என முட்டை பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story