"கொரோனா: டாஸ்மாக் மூட வேண்டும்" - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா பரவாமல் தடுக்க, டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதில், சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதால்,  கொரோனோ வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் நிவாரண நிதியை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன், ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்