அதிகரித்து வரும் டிக் டாக் போலி கணக்குகள் - பணம் சுருட்டும் கும்பலால் அதிர்ச்சி
சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள டிக்டாக் செயலியில் தற்போது கவர்ச்சி பெண்களின் பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி, மோசடிகள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொழுது போக்கு டிக்டாக் செயலியினால் சமுதாயத்தில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி அதை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
* இதனையடுத்து டிக் டாக்கில் வீடியோவை வெளியிடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது நீதிமன்றம். இருப்பினும் டிக் டாக் செயலி மீது பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
* இதன் வெளிப்பாடாக டிக்டாக்கில் இலக்கியா என்பவர், தொடர்ந்து கவர்ச்சிகரமான பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அவருடைய ஒவ்வொரு வீடியோவிற்கும், ஆயிரக்கணக்கில் லைக்குகளும், கமெண்டுகளும், குவிந்தன.
* இந்நிலையில், இவரது பெயரில் போலி கணக்கு தொடங்கி சிலர் பணம் பறிப்பதாக இலக்கியா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
* தமது, பெயரில் போலி ஐடிக்கள் உருவாக்கப்பட்டு பணம் பறிக்கும் செயல்கள் நடைபெற்று வருவதாகவும், யாரும் அதை நம்பி பணத்தை பறி கொடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
* டிக்டாக்கில், பல்வேறு மோசடிகள் அரங்கேறிய நிலையில், தற்போது கவர்ச்சியாக வீடியோக்கள் வெளியிடும் பெண்களின் பெயரை பயன்படுத்தி, ஒரு கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story