100 நாள் வேலை திட்டத்தில் விவசாய வேலைகள் - விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
பருத்தி பஞ்சு அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை நீடிப்பதால், நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பருத்தி பஞ்சு அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை நீடிப்பதால், நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ள நிலையில், கோடைக்காலம் என்பதால் பருத்திக்காய்கள் வெடித்து வருகின்றன. இதனால் வெடித்த பருத்தி பஞ்சுகள் வெயிலில் காய்ந்து எடை குறைவதுடன், காற்றில் பறந்து இழப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தி அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளதால், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், விவசாய பணிகளுக்கு ஆட்களை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
Next Story