போதையில் வாகனம் ஓட்டினால் கைது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
சாலை விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனு,  நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது.

* அப்போது,  மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வதை கண்காணிக்க தனிப்படைகளை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்

* மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் எனவும், உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

* மது போதையில் வாகனங்களை இயக்க முடியாதபடி, வாகனங்களில் பிரத்யேக கருவிகளை பொருத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர்.

* போதையில் வாகனம் ஓட்டியவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்