"செயல்படாத விழிப்புணர்வு முகாம், வேடிக்கை பார்க்கும் பணியாளர்கள்" - சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா மற்றும் பறவைக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்கள் செயல்படாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
களியக்காவிளை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பிரசார முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், படந்தாலுமூடு பகுதியில் பறவை காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்விரு முகாம்களும் செயல்படாமல் காட்சிப் பொருளாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள பணியாளர்களும், விழிப்புணர்வு பிரசாரம் செய்யாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இதுபோன்று அலட்சியமாக இருப்பது வேதனை அளிப்பதாகவும், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story