நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சட்டவிரோதமாக தம்மை சிறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறிய நளினி, விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிமன்ற விசாரணைக்கு பிறகு தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளதால் நளினி சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், நளினியை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாக அறிவிக்க முடியாது எனவும், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கூறி நளினியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story