"உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வர வேண்டாம்" - பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இருமல், தும்மல் உள்ள மாணவர்கள் கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் குறித்து மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவ மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல் இருமல் உள்ள நபர்களிடமிருந்து 1 மீட்டர் இடைவெளிவிட்டு இருக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
Next Story