14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை : "வருகிற 20ல் முதற்கட்ட பேச்சுவார்த்தை" - தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அரசு அழைப்பு
14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு, தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு, தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வருகிற 20ஆம் தேதி, குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், அகவிலைப்படி, இதரப்படி மற்றும் பல்வேறு சலுகை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story