ரூ.15,000 லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் - லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து விசாரணை

அரியலூரில், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கைது செய்யப்பட்டார்.
ரூ.15,000 லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் - லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து விசாரணை
x
அரியலூரில், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் மளிகைக்கடை நடத்தி வந்த பரணிதரன் என்பவர், எண்ணெய் சப்ளை செய்து வருகிறார். 
எண்ணெய் தரமில்லை என கூறி, அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அழகுவேல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை சரி செய்ய பரணிதரனிடம்   15 ஆயிரம்  ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச பணத்தை அழகுவேல் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்