குடிபோதையில் தகராறு செய்த தம்பி - உரல் கல்லால் அடித்து கொன்ற அண்ணன்
குடிபோதையில் தகராறு செய்த தம்பியை, உரல் கல்லால் அடித்து அண்ணன் கொன்றுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். வெளியூரில் வேலை செய்துவரும் இவர், அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து மது போதையில் அண்ணன் பழனிவேலுடன் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதே போல, சம்பவத்தன்றும் மது போதையில் தெருவில் உள்ளவர்கள் மற்றும் அண்ணன் பழனிவேலுடன் ஆறுமுகம் சண்டையிட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பழனிவேல் வீட்டில் இருந்த உரல் கல்லை தூக்கி ஆறுமுகம் தலையில் அடித்து, கொன்றுள்ளார். தகவல் அறிந்த செந்துறை போலீசார், பழனிவேலை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story