விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தேர் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின், ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து தேர்களில் விநாயகர், முருகர், பழமலைநாதர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Next Story