திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 3-வது முறையாக மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மறைமுக தேர்தலுக்காக, திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் 10 பேர் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு வந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் வராதததால், காலையில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 3-வது முறையாக மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு
x
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில், 15வது வார்டு உறுப்பினர் உஷாராணி சதாசிவம் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மறைமுக தேர்தலுக்காக, திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் 10 பேர் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு வந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் வராதததால், காலையில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து யாரும் எதிர்பாராத வகையில், மாலையில் அதிமுக அணியில் இருந்து 16வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி ஜெகதீசன், திமுக அணிக்கு தாவினார். இதனால் திமுக அணியின் பலம் 11 உறுப்பினர்கள் ஆன நிலையில் மாலையில் துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்