கூட்டுறவு சங்க தேர்தல் : அதிமுக - அமமுக கூட்டணி அமைத்து போட்டி

கும்பகோணம் அருகே உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் அடிதடி ரகளையால், ரத்து செய்யப்பட்டது.
கூட்டுறவு சங்க தேர்தல் : அதிமுக - அமமுக கூட்டணி அமைத்து போட்டி
x
கும்பகோணம் அருகே உடையாளூர் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் அடிதடி ரகளையால், ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆயிரத்து 904 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி  பெற்றுள்ள இந்த கூட்டுறவு சங்கத்தில், 11 பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள ஆயிரத்து 904  வாக்குகளில், மாலை 6 மணி வரை 913 ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இன்றும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்