திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
x
திருப்பூரில், மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு, வரும் 14ஆம் தேதி  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிலையில் இன்று திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள இடத்தில், புதிதாக மருத்துவ கல்லூரி அமைய உள்ள இடத்தை, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திருப்பூருக்கு மருத்துவ கல்லூரி அமைக்க உத்தரவு பெற்று கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்