மீனவர்கள் குடும்பத்திற்கு மறுவாழ்வு கோரி வழக்கு - மீன்வளத்துறை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவு
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு, மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிய வழக்கில், மார்ச் 16ஆம் தேதி நேரில் ஆஜராக மீன்வளத்துறை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு, மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிய வழக்கில், மார்ச் 16ஆம் தேதி நேரில் ஆஜராக மீன்வளத்துறை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில், மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மீன்வளத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கில், மீன்வளத்துறை இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
Next Story