பகவதி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், மாசித் திருவிழா கோலகலமாக தொடங்கியது.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், மாசித் திருவிழா, கோலகலமாக தொடங்கியது. கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளத்துடன், ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கொடியானது, கோயிலின் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக 10ம் தேதி நடைபெறும் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story