குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் போராட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த போராட்டத்தின் எதிரொலி சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றார்.
* நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
* இதேபோல் காரைக்காலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* திருவண்ணாமலையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Next Story