இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து - இயக்குநர் சங்கர் நேரில் ஆஜர்

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்த விசாரணைக்காக, இயக்குனர் சங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.
x
இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து, துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. இந்த அதிகாரி முன்னிலையில், இயக்குநர் சங்கர் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.  அவரிடம் இந்த விபத்து தொடர்பாக பல விவரங்கள் கேட்கப்படும் என தெரிகிறது. இவரை தொடர்ந்து, கமல், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு நிறுவனம் ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த 19ஆம் தேதி பூந்தமல்லி அருகே நடந்த இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர்

Next Story

மேலும் செய்திகள்