தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ல் மீண்டும் கூடுகிறது - சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.
x
2020-21ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய  கடந்த 14 ஆம் தேதி சட்டபேரவை கூடியது. நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதன் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டபேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சட்டபேரவை மீண்டும் மார்ச் 9ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுளார். இதில் அரசின் செலவுகளுக்கான முன் பண மானிய கோரிக்கை, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.  கூட்டத்தொடர் சுமார் 20 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இந்தத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடும் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்